Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 12 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
நாட்டில் பால்மாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வாழைச்சேனை பிரதேசத்திலும் பால்மா விநியோகத்தில் குழறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மாக்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள், சிறு வியாபாரத் தளங்களுக்கு பால்மாக்களை வழங்காமல், பெரிய வியாபாரத் தளங்களுக்கு மாத்திரம் வழங்கிச் செல்கின்றனர்.
இதனால், சிறு வியாபாரிகளும் நுகர்வோரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்தோடு, பெரிய வியாபார நிலையங்களில் பால்மாக்களுடன் இணைந்த வேறு பொருள்களை கொள்வனவு செய்வோர்களுக்கு மாத்திரமே பால்மாக்கள் வழங்கப்படுகிறன.
இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி, அனைவருக்கும் பால்மாக்கள் கிடைக்க வேண்டும் என வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர், வாழைச்சேனை பொலிஸ் உதவிப் பொறுப்திகாரி ஆகியோரின் கவனத்துக்கு வாழைச்சேனை வர்த்தக சங்கத்தினர் கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
20 minute ago
25 minute ago