2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

பாரிய விபத்து ; ஐவர் காயம்

Janu   / 2024 மார்ச் 14 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி , மாங்காடு பகுதியில் பாரிய விபத்து ஒன்று வியாழக்கிழமை (14)  இடம்பெற்றுள்ளதாக  களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று,  வீதியருகில் இரும்பு தளபாடங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்ட ரக வானத்துடன்  மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இவ்விபத்துச் சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில், ஐவர்  சிறு காயங்களுக்குள்ளாகிய  நிலையில்  தெய்வாதீனமாக  உயிர் தப்பியுள்ளதாகவும்  அருலிருந்த பேருந்து தரிப்பிடம் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதாகவும், தெரியவந்துள்ளது .

மேலும் இது தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர் .

வ.சக்தி   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X