Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2022 ஜூலை 09 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை இதும்பாலை பிரதேசத்தில் பாம்பு தீண்டியதில் வயோதிபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (08) மாலை உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திக்கோடை தும்பாலை பிரேதசத்தை சேர்ந்த் (67) வயதுடைய பொன்னுத்துரை மாணிக்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும், சம்பவ தினத்தன்று தனது மாடுகளை பராமரித்து விட்டு தனது வீட்டு அறையினுள் ஓய்வேடுத்திருந்த போது, வீட்டு அறையினுள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்தருந்த நிலையில், உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்றதையடுத்து, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி பதில் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக, சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் கையளிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago