Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 26 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரெட்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பங்குகொள்ளும் உயர்மட்டக் கூட்டமொன்று, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இராணுவத் தளபதியும், விமானப்படைக்குரிய ஹெலிகொப்டர் மூலம் மட்டக்களப்புக்கு வருகைதந்து, கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக மாவட்டச் செயலகம் மற்றும் மட்டக்களப்பு நகரில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், மாவட்டச் செயலகத்தில் கவச வாகனமும் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கடும் சோதனைகளுக்கு மத்தியில் மாவட்டச் செயலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, செய்தி சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் திரும்பியனுப்பப்பட்டனர்.
மேற்படிக் கூட்டம், என்ன விடயம் தொடர்பில் நடைபெற்றது, அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
43 minute ago
49 minute ago
2 hours ago