2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பாடசாலையின் பாதிப்பு தொடர்பில் மகஜர்

Princiya Dixci   / 2021 ஜனவரி 07 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மழை நீரால் பாடசாலைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அதனை கட்டுப்படுத்த வடிகான் ஒன்றை அமைத்துத் தரும் படியும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய நிர்வாகத்தினர், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரிடம் மகஜர் ஒன்றை நேற்று (6) கையளித்தனர்.

பாடசாலையை அண்மித்துள்ள வீதிகளில் வடிகான்கள் இல்லாமையால் வீதியிலுள்ள வெள்ள நீர் பாடசாலை வளாகத்துக்குள் வருகின்றன.

இதனால், பாடசாலை சூழல் பாதிப்படைவதோடு, கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிரமமாக உள்ளது என்று பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்து தரும்படி, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது என்று அதிபர் மேலும் தெரிவித்தார்.

மகஜரை கையளிக்கும் இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் முகாமைத்துவ குழுவினர், பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.இம்தியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .