Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூலை 14 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி கூட்டத்தில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் அக்கரைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரியும் மத்தியஸ்த சபை தவிசாளருமான தல்ஹா சீனி முகம்மதுவினை தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பிரதான சந்தேக நபரான பள்ளிவாசல் தலைவரை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆந் திகதி வரை குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் தொடர்பிலான வழக்கு வியாழக்கிழமை(13) அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்,
அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் என்பவர் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த (08.07.2023) சனிக்கிழைம அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரியில் இடம் பெற்ற பாடசாலை அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தல்ஹா சீனி முகம்மது (வயது-47) மீது அதே கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த எஸ்.எம். சபீஸ் உள்ளிட்ட இருவர் தன்னை தாக்கி அச்சுறுத்தியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த தாக்குதலை தொடர்ந்து தல்ஹா சீனி முகம்மது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார்.
பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்கள் கடந்த திங்கள் கிழமை(2023.07.10) கைது செய்யப்பட்டு மறுநாள் அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இரண்டு சரீர பிணையில் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து குறித்த தாக்குதல் சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான எஸ்.எம். சபீஸ் என்பவர் இன்று (13) அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் அஜரான போது சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்ட்டுள்ளார்.
மேலும் மேற்குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago