2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பல்வேறு வைத்தியசாலைகளுக்கு; வைத்திய அதிகாரிகள் நியமிப்பு

Freelancer   / 2022 ஜூன் 02 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வைத்திய அதிகாரிகள் பல்வேறு வைத்தியசாலைகளுக்கு நேற்று (31) நியமிக்கப்பட்டுள்ளனர்.

18 வைத்திய அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளுக்கும் நியமனம் பெற்றுபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கான கடிதங்களை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.குணசிங்கம் சுகுணன் வழங்கி வைத்தார்.

அதாவது பலகாலமாக ஆளணி பற்றாக்குறையாக காணப்பட்ட வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மாங்கேணி வைத்தியசாலை, மீராவோடை வைத்தியசாலை, காங்கேயனோடை வைத்தியசாலை,  திக்கோடை வைத்தியசாலை, களுவாஞ்சிகுடி,  காத்தான்குடி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகள் அவற்றினுள் சிலவாகும்.

எமது மாவட்ட சுகாதார சேவையை முடிந்தவரை மேம்படுத்த திடசங்கற்பம் கொண்டு தடைகளை உடைத்தபடி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்நோக்கி நடைபயிலும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம்  சுகுணன்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .