2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

பிரித்தானிய சிகரெட்களுடன் இருவர் கைது

Janu   / 2025 பெப்ரவரி 16 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளையில் இருந்து கல்முனை நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியில் வைத்து சுமார் 41 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்யப்பட்டதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன் போது பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட 25,420  சிகரெட் கைப்பற்றப்பட்டுள்ளன.  

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .