2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பயிர்களை துவசம் செய்த காட்டுயானை

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி        

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் அமைந்துள்ள தோட்டத்தினுள் நுளைந்த காட்டுயானை, அங்கிருந்த பயிர்களை அழித்து துவசம் செய்துள்ளது. 

சமுர்த்தி வங்கியின் வேலியை உடைத்துக்கொண்டு நேற்று செவ்வாய்கிழமை உள்நுளைந்த காட்டுயானை, அங்கிருந்த மரவள்ளி, வற்றாளை மற்றும் பயற்றை போன்ற பயிர்களை அழித்து சேதப்படுத்தியுள்ளதாக கரவெட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தெரிவித்தார். 

வங்கிக் காவலாளி மற்றும் வங்கி ஊழியர்களால் செய்கை பண்ணப்பட்ட விவசாயத் தோட்டமே இவ்வாறு காட்டுயானையினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .