Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜனவரி 27 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்றில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (26) பட்டப்பகலில் 14 பவுண் மதிக்கத்தக்க தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் கணவனும் மனைவியும் தொழிலுக்கு சென்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவ தினமான இன்று வைத்தியசாலையில் கடமை புரியும் கணவனும் மனைவியும் தனது இரு பிள்ளைகளையும் சகோதரியிடம் விட்டு விட்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
இதேநேரம் வீட்டு உரிமையாளரின் சகோதரி இரு பிள்ளைகளையும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் வீட்டிற்கு சென்று பார்க்கையில் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு திருட்டு நடைபெற்றுள்ளதை அவதானித்து அயலவர்களின் உதவியை கோரியுள்ளார்.
ஆயினும் வீட்டின் அலுமாரியில் இருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதை வீட்டின் உரிமையாளர் பார்வையிட்டு உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான பொலிசார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago