2025 மார்ச் 31, திங்கட்கிழமை

நையப்புடைத்து ஒப்படைத்த நபர் மரணம்

Janu   / 2025 மார்ச் 26 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டு. வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை  உயிரிழந்தார்.

கடந்த 15 ம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புது மண்டபத்தடி பிரதேசத்தில் மாடு திருடிய இளைஞன் ஒருவரை, பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்  குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறும் பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X