Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மே 12 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் 4,000 நூல்களை சேகரித்து நூலகம் ஒன்றை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செம்மண்ணோடை அகரம் கல்வி நிறுவனத்தின் செயலாளர் வை.எம்.பயாஸ் தெரிவித்தார்.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட செம்மண்ணோடை சனசமூக நிலைய கட்டடத்தில் இயங்கி வரும் வாசிகசாலையை நூலகமாக தரமுயர்த்தி, அதனை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் நோக்கில், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் இதுவரை 1,000 நூல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் இதில் அனைவரும் பங்கெடுத்து வீடுகளிலுள்ள நூல்களை வழங்கி உதவுமாறும் அவர் வேண்டிக் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago