2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

நீல பெண் கைது

Editorial   / 2024 மார்ச் 06 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை திங்கட்கிழமை (04) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை கைது செய்தனர்.

நீல நிறம் கொண்ட புதிய ஜஸ் போதை பொருள் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருள் பணம் என்பவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசிஆலை முகாம் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அம்பாறை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளர் வாவிடவிதானவின் ஆலோசனைக்கமைய   முகாம் பொறுப்பதிகாரி கே. ஜி. லக்மால் தலைமையிலான குழுவினர் வாழைச்சேனை பிறந்துறைச்சேனை பகுதியிலுள்ள குறித்த வீட்டை  முற்றுகையிட்டனர்.

இதன்போது போதை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 340 மில்லிக்கிராம் புதிய வகையான நீல நிறம் கொண்ட ஜஸ் போதை பொருள் மற்றும் வெள்ளை நிறமுiடைய 4 கிராம் 130 மில்லிக்கிராம் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருள் மற்றும் 8 ஆயிரத்து 750 ரூபாய் பணத்தை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய பெண்ணை விசேட அதிரடிப்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும்  இவரது கணவர் ஏற்கனவே போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X