2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

நீண்ட தூரம் பாய்ந்து விபத்துக்குள்ளான ஜீப் - மூவர் படுகாயம்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 10 , மு.ப. 12:24 - 0     - 59

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியிலிருந்து மட்டக்களப்புக்கு விடுமுறையை கழிக்கவந்த குடும்பம் ஒன்றின் ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஜீப்பில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மகாஓயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த ஜீப் வண்டியில் ஐந்து பேர் பயணித்த நிலையில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகவேகமாக வந்த வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட தூரத்திற்கு பாய்ந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X