2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நினைவுத் தூபியில் அஞ்சலி; பொலிஸ் விசாரணை தீவிரம்

Editorial   / 2021 நவம்பர் 04 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத் தூபியில் கடந்த 09.09.2021அன்று அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸுக்கு, தான் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களான த.கௌரி ஆகியோர் நேற்று (03) மாலை அழைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

என்ன நோக்கத்துக்காக குறித்த அஞ்சலி நிகழ்வு மற்றும் கலந்துகொண்டமை, விளக்கேற்றியமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் ஆதாரங்களுடன் சாட்சியங்கள் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், விளக்கேற்றியமை குறித்து விசாரணைகள் நடத்தப்படுவது இந்த நாட்டின் சட்ட நிலைமையைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .