2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நானூறு பாடசாலை பைகளை விநியோகம்

Freelancer   / 2023 ஜூலை 11 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் அமைச்சர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பகிர்ந்தளித்த நானூறு பாடசாலை பைகளை விநியோகிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (11)ஏறாவூரில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலக்கல்விப்பணிப்பாளர்  எஸ்.எம்.எம். அமீர் தலைமையில்  நகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேசங்களிலுள்ள இருபத்தேழு பாடசாலைகளின் பொருளாதாரம் குறைந்த நானூறு  மாணவர்களுக்கான இந்த  பைகள் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X