Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.சக்தி
மட்டக்களப்பு மாட்டத்தில் நன்னீர் மீன் வளர்ப்பை மேற்கொள்ள நிபுணர்களின் ஆலேசனைகளைப் பெற்றுக்கொள்ளும் விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் தெரிவித்தார்.
முதளைக்குடா, மகுலடித்தீவு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டங்களை அமுல்படுத்தத் தேவையான நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் விசேட செயலமர்வு மாவட்டச் செயலார் தலைமையில், மண்முனைப்பற்று டேபா மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்றது.
இதன்போது, நிபுணத்துவ ஆலோசகர்களாக கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தலைவர் கலாநிதி சீ.ஜீ. தேவதாசன், தேசியநீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் வட மாகாணத்துக்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர் வீ. நிருபராஜ், கைத்தொழில் சார் அனுபவமுள்ள பொது முகாமையாளர் சாமிந்த பெர்ணான்டோ, கிழக்குப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை தலைவர் பேராசிரியர் பீ. பிரேமானந்தா உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள், பீடாதிபதிகள் பலரது ஆலோசனைகளும் கருத்துகளும் உள்வாங்கப்பட்டன.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், நவீனமுறையில் இறால் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசின் விசேட திட்டத்தினடிப்படையில் முதலைக்குடா, மகிழடித்தீவு பகுதிகளில் இனங்காணப்பட்ட சுமார் 202.343 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இறால் மற்றும் நன்னீர் மீன் வளர்புத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025