2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

நன்னீர் மீன் அறுவடை ஆரம்பிப்பு

Mayu   / 2024 மே 19 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

கல்மடு குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகளின் அறுவடை  காலம் நெருங்கியுள்ள நிலையில் அதன் அறுவடை ஆரம்ப நிகழ்வை வௌ்ளிக்கிழமை (17)  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாய பூர்வமாக  ஆரம்பித்து வைத்துள்ளார்.

தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்துவதையும் நோக்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனூடாக  கல்மடு பகுதியை சேர்ந்த 75 இற்கு மேற்பட்ட நன்னீர் மீன்பிடி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கடந்த ஜனவரி சுமார் ஓர்  இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X