2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நத்தார் ஆராதனைகளில் 25 பேருக்கே அனுமதி

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, மட்டக்களப்பில் நத்தார் ஆராதனைகளில் பங்குகொள்ள, 25 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் கே. கருகருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டக் கொரோனா வைரஸ் தடுப்புச் செயலணியின் அவசரக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நேற்று (19) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், பண்டிகைக் காலங்களில் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டது. நத்தார் பண்டிகையைத் தொடர்ந்து, புத்தாண்டு, தைப்பொங்கல் என தொடர்ச்சியாகப் பண்டிகைக் காலமாகையால், மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்புடன் செயற்பட வேண்டுமென இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

“தேவாலயங்களுக்கு நத்தார் பண்டிகை விசேட ஆராதனைக்காக வருகின்றவர்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும். அவ்வாறு சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு, பொலிஸ் விசேட குழுவினருடன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

“சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிக்காதோர், சட்ட நடவடிக்கைக்கு உட்படுவது தவிர்க்க முடியாததாகும். இம்முறை, எழிமையான முறையில் பண்டிகைகளை பொதுமக்கள் கொண்டாடுவதுதான் கொரோனா வைரஸ் தொற்றைக் குறைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது” என மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .