2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற சாரதி

Janu   / 2024 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பேருந்தொன்று தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .

கல்முனை - யாழ்ப்பாண சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் பயணித்த, கஷ்ட பிரதேச பாடசாலையியொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கே இச் சம்பவம் நேர்ந்துள்ளது .

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவிக்கையில், 

“ மட்டக்களப்பு எல்லைக் கிராமப்புற பாடசாலையான ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் இருந்து ஓட்டமாவடிக்கு வருவதற்கு திங்கட்கிழமை  (12) அன்று இ.போ.ச. பேருந்தில் பயணித்த சமயம் இடைநடுவே என்னுடைய பிரயாணப்பை பேருந்தில் இருந்து தவறி விழுந்து விட்டது. 

அதை நன்கு அவதானித்த சாரதி, பேருந்தை நிறுத்தி என்னுடைய பையை எடுத்து வரும் வரையில் காத்து நிற்பதாக சொன்னார். நான் அந்தப் பையை எடுக்க சென்றதும், யானைகள் நடமாட்டம் உள்ள காட்டுக்குள் என்னை தன்னந்தனியே விட்டு சென்று விட்டார். 

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அந்த நடுக்காட்டில் கொளுத்தும் வெயிலில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அச்சத்தோடு காத்திருந்து ஓட்டமாவடி வந்தடையும் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டது.

 இவ்வாறான மோசமான செயல்களில் ஈடுபடும் ஒரு சில சாரதி, நடத்துனர்களால் ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவதுடன், அரச பேருந்துகளை நம்பி பயணிக்கும் அரச ஊழியர்கள், பொது மக்களுக்கும் அசெளகரியங்கள், நம்பிக்கையீனங்களும் ஏற்படுகிறது ” எனத் தெரிவித்தார். 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  

அஸ்ஹர்  இப்ராஹிம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .