2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தோணியில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Editorial   / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோணியில் மீன்பிடிக்கச் சென்ற மூதூர் பஹ்ரியா நகரைச் சேர்த்த 3 பிள்ளையின் தந்தை இன்று (26) ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹ்ரியா நகரைச் சேர்ந்த முஹம்மது யூசுப் (வயது 35) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை தோணியில் தனியாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

அன்று மாலை 3  மணியாகியும் வீடு திரும்பாத குறித்த மீனவரைத் தேடும் பணியில் மீனவ சங்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கடற்படை, விமானப்படை வீரர்களும் ஈடுபட்டிருந்தனர்.

 மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணியின்போது ஞாயிற்றுக்கிழமை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதன்பின்ன்னர் மூதூர் பொலிஸாரின் மரண விசாரணைகளை அடுத்து பஹ்ரியா விளையாட்டு மைதானத்தில் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .