2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தொற்று அதிகரிப்பு; வைத்தியசாலைகளில் கட்டில்கள் நிரம்பின

Princiya Dixci   / 2021 மே 28 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்ட தனியார் ஆடைத்தொழிற்சாலையில் கடந்த 4 நாட்களில் 71 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட தனியார் ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.

“திங்கட்கிழமையன்று, ஆடைத் தொழிற்சாலைக்கு வைத்தியர் குழு சென்று அங்கு நிலைமையை ஆராய்ந்த பின்னரே மீண்டும் திறக்கப்படுவது தொடர்பில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் கரடியானாறு வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலைகளில் கட்டில்கள்  நிரம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை வேறு மாவட்டத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

புதிதாக வாகரை, வாழைச்சேனை மற்றுமு் நாவற்காடு ஆகிய வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .