2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

தொடர் கடையடைப்பு; வியாபாரிகளுக்கு நட்டம்

Princiya Dixci   / 2021 மே 16 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மூன்று நாள்கள் தொடர் கடையடைப்புக் காரணமாக வியாபாரத்தில் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

றமழான் பெருநாள் தினத்தை நம்பி விற்பனைக்காக பொருள்களை கொள்வனவு செய்த போதும் கடைகளை திறக்க அரசாங்கம் கட்டுப்பாடு விதித்ததில் வியாபாரத்தில் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள பழ வகைகள் மற்றும் மரக்கறிக் கடைகளின் வியாபாரிகளே கூடுதல் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த பொருள்களை விற்பனை செய்ய முடியாமலும் அதனை பாதுகாக்க முடியாமலும் பழுதடைந்த நிலையில் வீசியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .