2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

துண்டுப்பிரசுரம் விநியோகம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 17 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் நோக்கோடு, சுகாதார துறை பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
 
அந்தவகையில், பேத்தாழை பொது நூலக உத்தியோகத்தர்களால் கொரோனா வைரஸை தடுப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.

பேத்தாழை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ்.குமுதினியினால் தயாரிக்கப்பட்ட “அரசின் கட்டனைக்கு அடிபணிவோம் - கொரோனாவை வெற்றி கொள்வோம்” எனும் துண்டுப்பிரசுரம், பேத்தாழை பொது நூலககத்தால் வெளியிட்டு, பொதுமக்களுக்கு இன்று (17) விநியோகிக்கப்பட்டன.

வைத்தியசாலை மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் இடங்களில் இந்தத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வில், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித், சனசமூக உத்தியோகத்தர் அ.காருண், பேத்தாழை பொது நூலக ஊழியர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .