2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

திலீபனுக்கும் ராஜனுக்கும் தடை

Editorial   / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கு கல்முனையில் நினைவேந்தல் நடாத்துவதற்கும் உண்ணாவிரதமிருந்த ராஜனுக்கு, கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் கல்முனையில் உண்ணாவிரதம் இருந்த உண்ணாவிரதியுமான சந்திரசேகரம் ராஜனுக்கு இந்த தடை உத்தரவை இரண்டு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்  விடுத்த வேண்டுகோளை ஏற்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 கல்முனை பொலிஸ் நிலையத்தில் இருந்தும், பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திலிருந்தும் இந்த தடைஉத்தரவு கோரி நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

இந்த தடை உத்தரவை, பொலிஸார்  திங்கட்கிழமை (25)  அவரிடம் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X