2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

திடீர் குண்டுவெடிப்பில் ஒருவர் படுகாயம்

Janu   / 2024 மார்ச் 07 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு,  வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு  வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் வியாழக்கிழமை (07)  இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குறித்த பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் காணியை துப்பரவு செய்து அதன்குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்தபோது அதில் இருந்த கைக்குண்டு  பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளதாக  தெரியவந்துள்ளது .

மேலும்  இச்  சம்பவத்தில்  படுகாயமடைந்த குறித்த  நபர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X