Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மே 03 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன், க.விஜயரெத்தினம், வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் (மேற்கு) கிராம உத்தியோகத்தர் பிரிவின்3 குறுக்கு வீதிகள், இன்று (03) அதிகாலை முதல் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
இந்த முடக்கத்துக்கான தீர்மானத்தை மேற்கொண்டு, தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணிக்கு பரிந்துரை செய்ததாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்ட கொவிட் 19 தடுப்புச் செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கொவிட் 19 தடுப்புச் செயலணியின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் சிகிச்சை பெறுவதற்காக திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் சென்றிருந்தார்.
“இதன்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில், அந்நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
“இதனையது்து அவர் வசித்த பகுதிக்குச் சென்ற சுதாதாரத் தரப்பினர் எழுமாறாக 24 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 11 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
“மேலும், நேற்று (02) கிடைக்கப் பெற்றுள்ள அறிக்கைகளின் படி மொத்தமாக நேற்றைய தினம் மாத்திரம் 32 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
“அதில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 12 பேரும், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் நால்வரும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் எண்மரும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இருவரும் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஐவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.
“இது தொடர்பில் ஆராய்ந்த போது, உடனடியாக திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை முடக்கத் தீர்மானிக்கப்பட்டது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago