2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தாழங்குடா விபத்தில் இளைஞன் பலி; சாரதி கைது

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்,  வ.சக்தி , எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்களிலும் காரும் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த செங்கலடி, பங்குடாவெளியைச் சேர்ந்த 30 வயதுடைய தங்கராசா ஜெர்சன் என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச்சென்ற காரும் மட்டக்களப்பு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இது தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .