Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 09 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
சர்வதேச நாடுகள், தங்கள் நாடுகளின் நலனை மட்டும் முன்னிறுத்திச் செயற்படாமல், இலங்கையில் உள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்கும் வகையிலான பொறிமுறையொன்றை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிபாரிசு செய்யவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு அநீதிகளுக்கு சர்வதேசத்தின் நீதியை கோரி, மட்டக்களப்பு - மாமாங்கேஸ்வரர் கோவில் முன்றலில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்று(09) 7ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தில் நேற்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் நகுலேஸ், மட்டக்களப்பு மாவட்ட இந்துக் குருமார் ஒன்றியம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய தர்மலிங்கம் சுரேஸ், “இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநீதிகள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டுமென இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது.
“பிரித்தானியாவுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. இலங்கையை ஒரு கொலனியாக மீண்டும் மீண்டும் பாவிக்காமல், இங்கிருக்கின்ற சிங்கள-தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழக்கூடியதாக தங்கள் நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டும். இதற்கான கோரிக்கைகளை முன்வைத்தே, வட, கிழக்கில் சுழற்சி முறையிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago