2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

தன்னாமுனை விபத்தில் ஒருவரி பலி: மூவர் படுகாயம்

Editorial   / 2024 பெப்ரவரி 18 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன் 

மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (16)  மாலை இடம்பெற்ற வாகன  விபத்தில்  முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர்  காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

 காத்தான்குடியை சேர்ந்த நான்கு பேர்  முச்சக்கர வண்டியில் ஏறாவூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது தன்னாமுனையில் வைத்து முச்சக்கர வண்டியும் சிறிய லொறியும் மோதுண்டு இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது 

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த  காத்தான்குடி  ஷைகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரியாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி குழந்தை உட்பl 3 பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

உயிரிழந்தவரின்  சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை  செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இவரின் ஜனாஸா தொழுகை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் சனிக்கிழமை (17) இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .