Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 12 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்துக்குட்பட்ட அரசடி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலின்டரிலிருந்து வாயு கசிவு வந்துகொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்ததுடன், குறித்த வெடிப்பினால் எரிவாயு அடுப்பு இருந்த அறையின் வாயிற்கதவு வெடித்துச் சிதறியுள்ளதுடன், அறையினுள் இருந்த பொருள்களும் முற்றாக எரிந்துள்ளன.
சம்பவத்தின் போது வைத்தியசாலையில் எவருக்கும் இருக்கவில்லையெனவும் இதன் காரணமாக மேலும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago