2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பூட்டு

Princiya Dixci   / 2021 மார்ச் 03 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் இம்மாதம் 15ஆம் திகதி வரை மூடுமாறு, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.நபீல் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால் நேற்று (02) நடைபெற்ற காத்தான்குடி நகருக்கான கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, காத்தான்குடியில் தனியார் கல்வி நிறுவனங்கள், குர்ஆன் மதரசாக்கள், மக்தப்கள், பாலர் பாடசாலைகள் என்பவற்றை மூடுமாறு கேட்டுக் கொள்வதுடன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின் எழுத்து மூல அனுமதியுடனேயே திறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X