Princiya Dixci / 2021 ஜூன் 04 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
எந்தவித அச்சமின்றி அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் பாலூட்டும் தாய்மார்களும் இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி, கொரோனா தொற்றிருந்து பாதுகாப்பாக இருக்க கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு, மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கர்ப்பிணித் தாய்மாருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்படவுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னிலை அடிப்படையில் தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கப்பட ஏற்பாடு செய்யப்படுகின்றது.
“அதேவேளை, முதலில் 12 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் ஆலோசனைக்கமைய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
“எனவே, அனைத்து பாலூட்டும் தாய்மார்களும் அச்சமின்றி தடுப்பூசியை ஏற்றமுடியும். அதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்களும் வைத்திய ஆலோசனையில் தடுப்பூசியை எந்தவொரு தயக்கமோ அச்சமோ இன்றி தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளமுடியும்” என்றார்.
இந்தத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பிரதேசத்திலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் கலந்துகொண்டு, தடுப்பூசியை ஏற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
14 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
14 minute ago
35 minute ago