2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

டெங்கொழிப்பு தொடர்பில் விசேட அவதானம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 16 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு ஒழிப்புத் தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில், ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்றது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவு டெங்கு தாக்கத்தில் முதலாம் இடத்தில் காணப்படுவதால், டெங்கை ஒழிக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன்போது, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராம அதிகாரி பிரிவுகளில் டெங்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம சேகவர் பிரிவு ரீதியாக வேலைத் திட்டம் ஆரம்பித்தல், டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடல், பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் மேற்கொள்ளல், டெங்கு தாக்கம் அதிகமாக கொண்டுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தல், கிணற்றுக்கு பாதுகாப்பு வேலைப்பாடுகள் செய்தல், பிரதேச சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் டெங்கு தாக்கம் அதிகமுள்ள இடங்களை இனங்கண்டு நடவடிக்கை மேற்கொள்ளல் போன்ற தீர்மானங்கள் இதன்ஆபாது எடுக்கப்பட்டன.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முற்று முழுதாக டெங்கை இல்லாமல் ஒழிப்பதற்கு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்று ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .