Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 19 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - ஏறாவூரில் டெங்கு நுளம்பு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை (18) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மாவட்டத்தில் நேற்று மட்டும் 14 பேர் டெங்கு நுளம்பு நோய்தாக்கத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குனசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
ஏறாவூர் ஜயங்கேணி பாரதிகிராமத்தைச் சோந்த 22 வயதுடைய பகிரதன் தனுஷ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் டெங்கு நுளம்பு தாக்கத்துக்கு உள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 16ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலைதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
பொதுமக்கள் வீட்டில் ஒரு நுளம்பைக் கண்டாலும் சுற்றுப்புறச்சூழலை துப்பரவு செய்யுங்கள், காய்ச்சல் ஏற்பட்டால் அரச வைத்தியசாலைக்கு சென்று உடனடியாகவே மருத்துவ ஆலோசனையை பெறுங்கள்..
காய்ச்சல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தால் இரத்தப்பரிசோதனை செய்யுங்கள், காய்ச்சலுக்கு பரசிட்டமோலை தவிர வேறு மருந்துளை ஒருபோதும் பாவியாதீர்கள்.
ஆகவே 'ஒரு நுளம்பு உன்னை நாளை கொல்லும் நீ அதை இன்றே கொல்லாவிடில்' என்பதனை மனதில் நிறுத்திக் கொண்டு பொதுமக்கள் தமது சுற்று சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் டெங்கு நுளம்பு தொடர்பாக எச்சரிக்கையுடன் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டார. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago