Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மே 30 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு நகரில் குடிமனைகளை ஊடறுத்துச் செல்லும் வடிகான்களில் காடு வளர்ந்து கழுவு நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால், டெங்கு நுளம்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமது வீடுகளில் தேங்காய் சிரட்டை மற்றும் ரின்களை தேடுவதை சுகாதார அதிகாரிகள் விட்டுவிட்டு, இந்த வடிகானில் நீர் தேங்கி நிற்பது தொடர்பாக மாநகர சபைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு நகரில் ஆசிரியர் கலாச்சாலைக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் இந்த பெரிய வடிகான், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிமனைகளை ஊடறுத்து, பொற் தொழிலாளர் வீதி ஊடாக கல்லடி வாவியை சென்றடையும் சுமார் ஒரு கிலோமீற்றருக்க அதிகமான தூரத்தை கொண்டு, வடிகானில் மரங்கள் காடுகள் போல வளர்ந்துள்ளதுடன், கழிவுப் பொருட்களால் குவிந்துள்ளதால் கழிவு நீர் வழிந்தேட முடியாமல் தேங்கி நிற்கின்றது.
இதனால் டெங்கு நுளம்பு மற்றும் விச பாம்புகள் விச பூச்சிகள் வடிகானுக்கு அருகிலுள்ள வீடுகளுக்குள் உள் நுழைவதும் டெங்கு ஏற்பட கூடிய நிலையும் துர்நாற்றம் வீசிவருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவாதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் டெங்கு நுளம்பை ஒழிப்பதாக தமது வீடுகளுக்கு வரும் பொது சுகாதார அதிகாரிகள், இந்த வடிகானில் டெங்கு நுளம்பு வளர்க்கும் மாநகர சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார்களா அல்லது வழக்குத்தான் தொடர்வார்களா? பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
36 minute ago
48 minute ago