2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

டெங்கினால் 331 பேர் பாதிப்பு ; மீன்குஞ்சுகள் விநியோகம்

Freelancer   / 2022 ஜூன் 09 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், கடந்த ஒரு மாத காலத்தில் இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன் 331பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு நுளம்புகள் பெருகாமல் இருப்பதற்காக, கிணறுகளில் மீன்குஞ்சுகளை இடும் நடவடிக்கைகளை சுகாதார பகுதியினர் மேற்கொண்டுள்ளனர்.

மாமங்கம் பிரதேசத்திலுள்ள கிணறுகளில்  விடுவதற்கான மீன்குஞ்சுகள் பொதுமக்களுக்கு இன்று (09) வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் மாமங்கம் பங்குத்தந்தை அருட்தந்தை பிறைனர் செலர், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.விஜயகுமார், மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கிசாந்தராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர். 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .