Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 டிசெம்பர் 28 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், வி.ரி. சகாதேவராஜா
ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயதுடைய ஒருவருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்த அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 9 கிராமும் 850 மில்லி கிராமும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு 3 மாதகாலமாக விளக்கமறியலில் வைக்கப்படிருந்தார். அந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பத்திரம் வீடியோ காணொளி மூலமாக கடந்த தவணை வாசித்துக் காண்பிக்கப்பட்டது. குற்றத்தை ஏற்றுக் கொண்டார். அதனையடுத்து அவரது அடையாள மற்றும் தண்டணைத் தீர்ப்புக்காக செவ்வாய்கிழமை (27) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்
இதன்போது அவருக்கு ஒருவருட சிறைத் தண்டணை விதித்து முதல் 6 மாத கடுழிய சிறைத் தண்டனையும் மிகுதி 6 மாத காலச் சிறைத் தண்டணை 7 வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு நீதவான் தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .