2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஜன்னல் வழியாக செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள்

Princiya Dixci   / 2021 ஜூலை 11 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

ஓட்டமாவடி பிரதேசத்துக்கு நேற்று (10) விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் அலி சப்ரி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மீள்குடியேற்ற மக்களுக்கு வீடுகள் அமைக்க முதல் கட்டமாக ஒன்பது குடும்பங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

சுகாதாரப் பாதுகாப்புகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற பிரதேச ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

நிகழ்வின் செய்திகளை சேகரிக்க நீண்ட நேரம் காத்திருந்த ஊடகவியலாளர்கள், நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தின் ஜன்னல் வழியாக  ஒளிப்பதிவுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .