2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஜனாதிபதி இல்லாமல் நாட்டை நிர்வகிக்க முடியுமா?

Princiya Dixci   / 2022 மே 03 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதி,  பாராளுமன்றம் இல்லாமல் நாட்டை நிர்வகிக்க முடியுமா என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் இன்றைய ஆட்சி நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மேலும் அவர் கூறுகையில், 

“கொரோனா காரணமாக  ஏற்பட்ட டொலர் தட்டுப் பாட்டினாலும்,  நிதி பற்றாக்குறை, அரசாங்கத்தின் மோசடி ஆட்சி முறை,  வெளிநாடுகளின் அழுத்தங்கள் மற்றும் அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் போன்றவற்றால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர்.

“எனவே, அரசாங்கத்துக்கு எதிராக மூவின மக்களும் கட்சிபேதமின்றி, இன, மத பேதமின்றி வரலாற்றில் இல்லாதவாறு வெகுஜன ரீதியான போராட்டங்களை முடக்கி விட்டுள்ளனர்.

“இந்நிலையில், பெரும்பான்மை பலத்தை இழந்த அரசாங்கம், எதிர்க்கட்சிகளின் பலவீனங்களும், வெளிநாடுகளின் தலையீடுகளினாலும் முழுமையாக இந்த ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் ஸ்தம்பித்துள்ளது.

“மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி,  நிர்வாகமாக இருந்தாலும் சரி உதவி புரிகின்றவர்களில் உதவிகளை பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

“கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில்  பலவீனமான திட்டங்களும்,  நிர்வாகங்களும் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தால் எந்த நாடும் உதவி புரிவதற்கு முன் வராது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .