2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சொத்து விவரங்களை வெளிப்படுத்தல்

Princiya Dixci   / 2021 மார்ச் 25 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பகிரங்க சேவையாளர்களும் தங்களது சொத்துகளையும் பொறுப்புக்களையும் ஏப்ரல் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த வேண்டுமென கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாரால் கேட்கப்பட்டுள்ளது.

“1988ஆம் ஆண்டின் 74ஆம் இலக்க சட்டத்தில் திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க சொத்துகள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்துகைச் சட்டத்தின் கீழ், சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பகிரங்க சேவையாளர்களும் தமது சொத்துகள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

“எனவே, தங்களது உள்ளூராட்சி மன்றங்களால் வழங்கப்பட்டுள்ள படிவங்களை முறையாகப் பூரணப்படுத்தி, 2020.04.01 தொடக்கம் 2021.03.31 வரையான தங்களது சொத்துகள் பற்றிய விவரங்களை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X