Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சைபர் குற்றங்கள் எனும் இணைய வழியூடாக நடைபெறுகின்ற கண்ணுக்குத் தெரியாத எதிரிகளோடும் சமகாலப் பெண்கள் போராட வேண்டியுள்ளதாக “அகம்” மனிதாபிமான வள நிலையத்தின் சட்ட ஆலோசகரும் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளருமான சட்டரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.
“மீள்வோம் சிறப்புடன்- மனித உரிமைகளுக்காக தோள் கொடுப்போம்” எனும் ஐக்கிய நாடுகள் சபையின் 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை தினத்தின் கருப் பொருளை மையமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு, அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு தன்னாமுனை மியானி கேட்போர் அரங்கில் இன்று (10) நடைபெற்றது.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த வளவாளர், சட்ட ஆலோசகர் மயூரி, “இணைய வழியூடான சைபர் குற்றங்கள் தற்போது வியாபித்துள்ளன. இந்த சைபர் குற்றங்கள் மூலமாக குறிப்பாக பெண்கள் மிகவும் மேசமாகவும் தொடர்ச்சியாகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டு வருகின்ற நிலைமையைக் காண்கின்றோம். மன உளைச்சலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் தற்கொலைகள் கூட இடம்பெற்றிருக்கின்றன.
“ஆகவே, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் நாம் மனித உரிமைகளை மதிக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago