Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூன் 17 , பி.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேசத்தில் பணத்துக்காக சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேரை இன்று (17) மாலை கைது செய்துள்ளதாகவும் 6 சண்டை சேவல்கள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நாவலடி பிரதேசத்தில் இன்று மாலை 6 மணியளவில் சேவல் சண்டை நடத்திவந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த 6 பேருடன் சேவல் சண்டையை பார்த்துக் கொண்ட ஒருவர் உட்பட 7 பேரை கைது செய்ததுடன் 6 சேவல்களையும் ஒரு தொகை பணத்தையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 - 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
21 Apr 2025
21 Apr 2025