2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

‘செளபாக்கியா’ வீடு திறந்து வைப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

சமுர்த்தி செளபாக்கியா திட்டத்தின் கீழ், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் திறந்து வைத்து பயனாளிகளிடம் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது.

இதன்படி, ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில்   நிர்மாணிக்கப்பட்ட சமுர்த்தி செளபாக்கியா வீடு, இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயத்தின் மேற்பார்வையிலும் ஆலோசனையிலும்  இந்த வீடு திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில்  மண்முனை பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பாத்திமா பரீட், சமுர்த்தி சமூக அபிவிருத்தித் திட்ட உதவியாளர்  எம்.ஜூனைதீன் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர் கள் கலந்துகொண்டனர்.

குறித்த வீடு, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன்,  பயனாளியின் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதி பங்களிப்புடன், மூன்றரை இலட்சம்  ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .