2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சூழலைப் பாதுகாக்கும் இராணுவத்தினர்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

“கிழக்கினை ஒன்றிணைந்து பாதுகாப்போம்” எனும் தொணிப்பொருளில், மட்டக்களப்பு – சித்தாண்டி மற்றும் வாழைச்சேனை – நாவலடி இராணுவத்தினரின் ஏற்பாட்டில், சூழலை பாதுகாக்கும் மாபெரும் சிரமதான வேலைத்திட்டம், இன்று (13) முன்னெடுக்கப்பட்டது. 

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில், ஓட்டமாவடி பிரதேச செயலக செயலாளர் வீ.தவராஜா, கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல்கள் நிர்வாகத்தினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஓட்டமாவடி மேம்பாலப் பகுதியில் இருந்து கொழும்பு வீதி – மியாங்குளம் பகுதி வரை முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தில் வீதியோங்களில் காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டதுடன், வீதியால் சென்ற வாகனங்களை மறித்து “பாதையில் குப்பை போட வேண்டாம்” எனும் ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .