2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இந்தியர் மட்டக்களப்பில் கைது

Freelancer   / 2023 ஜூலை 15 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் 

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விசா இன்றி 2 வருடங்களாக வாழ்ந்து வந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு நகரில் வைத்து இன்று சனிக்கிழமை (15) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு சின்ப்பள்ளிகிராமம் கம்பள்ளி பேஸ்ட் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பன் செல்வதுரை என்ற நபர், கடந்த 2021ம் ஆண்டு சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த நிலையில் யாழ்ப்பாணம் கைலாசர்பிள்ளையர் கோவில் பகுதியில் தங்கிருந்துள்ளார்.

இவர் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகர்பகுதியில் நண்பர் ஒருவருடன் சத்தேகத்திற்கிடமாக நடமாடிய நிலையில் இருவரையும் கைது செய்து விசாரணையின் போது விசா இன்றி கடந்த 2 வருடங்களாக தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X