2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

சுகாதார அதிகாரிக்கு தூசன வார்த்தைகளால் அச்சுறுத்தல்

Princiya Dixci   / 2021 மே 31 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

கொரோனா மூன்றாம் அலை மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறையினர் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில், தமது உயிரைக் கூட பணயம் வைத்து பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரை தொலைபேசியூடாக மிகக்கடுமையான அச்சுறுத்திய சம்பவமொன்று, மட்டக்களப்பு - ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அச்சுறுத்திய அந்நபர், பொதுச் சுகாதாரப் பரிசோதகரை அச்வுறுத்துகையில், மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் என்.மயூரன் மற்றும் ஜனாதிபதியையும் கடுமையான தூசன வார்த்தைகளால் எச்சரித்துள்ள குரல் பதிவு தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அச்சுறுத்தலுக்குள்ளான ஆரையம்பதி பொது சுகாதார பரிசோதகர் கந்தசாமி ஜெய்சங்கர், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன், தனக்கு விடுக்கப்பட்டுள்ள  உயிர் அச்சுறுத்தலிலிருந்து  பாதுகாக்குமாறு, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் அகில இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் என்பவற்றில் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

அச்சுறுத்திய நபரின் உறவினர் ஒருவரின் வீட்டில், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், “தனிமைப்படுத்தல் பிரசுரம்” ஒட்டியதற்காகவே இவ்வாறு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .