Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 14 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் சீமெந்து விற்பனையானது பாவனையாளர்களுக்கு பாரிய அசௌகரியங்களை கொடுக்கும் நிலைமையாக மாறி உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சீமெந்து விற்பனை முகவர்களுக்கு, காத்தான்குடி சீமெந்து சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
சீமெந்து விற்பனையை கருத்திற்கொண்டு, சில்லறை வியாபாரிகளுக்கு சீமெந்தை விநியோகிக்குமாறும் அச்சங்கம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி சீமெந்து சில்லறை விற்பனையாளர்கள் கையொப்பமிட்டு, அக்கடித்தை அனுப்பி வைத்துள்ளனர்.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நமது பிரதேசத்தில் சீமெந்து விற்பனையானது பாவனையாளர்களுக்கு பாரிய அசௌகரியங்களை கொடுக்கும் நிலைமையாக மாறி உள்ளது.
“கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது போன்று தங்களது சீமைத்தை பொதியில் பொறிக்கப்பட்டுள்ள விலையில் விற்பனை செய்வதற்காக நேரடியாக சில்லறை விற்பனையாளர்கள் கடை வைத்திருப்பவர்களுக்கு வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்
“தற்போது நிலவுகின்ற நிலைமை தொடருமாக இருந்தால், நுகர்வோர் அதிகார சபை இது விடயத்தில் தலையீடு செய்வதுடன், சீமெந்து கம்பெனிகளுக்கும் நாம் அறிவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago