Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 17 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையினால் சிறுவர்களின் போஷாக்கு குறைபாடு காணப்படுகின்றது.
எனவே, சிறுவர்களின் போஷாக்கை அதிகரிப்பதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓட்டமாவடி அஸ் ஸலாஹியா முன்பள்ளி பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு போஷாக்கான உணவுகளை வழங்குவதில் பொருளாதார பிரச்சினை உள்ளதாகவும் குறித்த பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறும் கோரியதற்கிணங்க அஸ்ஸலாஹியா முன்பள்ளி நிர்வாகம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் ஊடாக வன்னி ஹோப் தன்னார்வ நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அந்தவகையில், அஸ்ஸலாஹியா முன்பள்ளிக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு போஷாக்கான உணவை வழங்குவதற்காக 250,000 ரூபாய் நிதி உதவியை வன்னி ஹோப் இன்று (17) வழங்கி வைத்தது.
இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கணக்காளர் எம்.ஐ.எஸ். சஜ்ஜாத் அஹமட், வன்னி ஹோப் -இலங்கை பணிப்பாளர் எம்.டி.எம். பாரிஸ், அமைப்பின் கள உத்தியோகத்தர் ரதிகலா, ஊடக இணைப்பாளர் பி. வஸீம், பிரதேச செயலக சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம். நஜீம், அஸ்ஸலாஹியா முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் அதன் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொணடனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago