2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சிறுவர் பங்களிப்புடன் பட்ஜெட் வரைபு

Princiya Dixci   / 2020 நவம்பர் 25 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

சிறுவர்களின் பங்களிப்புடன் நிதியறிக்கை (பட்ஜெட்) வரைபு தொடர்பான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாநகர மேயரும் நிதிக்குழுவின் தலைவருமான தியாகராஜா சரவணபவன் தலைமையில், நகர மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கையைத்  தயாரிப்பதற்காக, நாட்டில் முதன்முறையாக சிறுவர்களின் கருத்துகளையும் உள்வாங்கும் நோக்கில், இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக, சிறுவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் யுனிசெப் (UNICEF) மற்றும் செரி (CERI) நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுவர் நேய மாநகர செயற்பாடுகள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது. 

அத்துடன், சிறுவர்களின் ஆளுமை விருத்திக்கு ஏற்ற வகையிலான செயற்பாடுகளுக்கு பட்ஜெட்டில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் சிறுவர்களால் முன்மொழியப்பட்டன.

இதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் சிறுவர்களாக வரையறுக்கப்பட்டிருந்த போதும் 12 - 18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு சிறுவர் பூங்காக்களில் உரிய பொழுதுப்போக்கு அம்சங்கள் காணப்படாமை, சிறுவர் கழகங்கள் இயங்குவதற்கான இட வசதிகள் இல்லாமை மற்றும் சிறுவர்களுக்கு என வடிவமைக்கப்பட்ட மைதானங்களின் தேவைப்படுகள் என பல்வேறு முன்மொழிவுகளும் சிறுவர்களால் முன்வைக்கப்பட்டன.

சிறுவர்களின் மேற்படிக் கோரிக்கைகளுக்கு அமைய,  2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரைபில் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக, மாநகர மேயர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .